அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு தில்லி விமான நிலையத்தில் இருந்த ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் புறப்பட தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் விமானிகள் விமானத்தை சோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக விமானத்தின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தி அணைக்கப்பட்டது. விமானத்தில் பயணிகள் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தடுக்கப்பட்டுள்ளது.
ஏசி பழுதுபார்த்தபோது ஏற்பட்ட மின்கசிவினால் விமானத்தின் பின்புறத்தில் தீ ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீ அணைக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து முழுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்ற ஏர்இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.