tamilnadu

img

விஸ்வபாரதி பல்கலை.யில் சிஏஏவிற்கு எதிராக போராடி எஸ்எப்ஐ நிர்வாகிகள் மீது ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல்

மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள்  மீது ஏபிவிபி குண்டர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். 
பல்கலைக்கழகத்திற்குள் துணைவேந்தரின் உதவியுடன் உள்ளே ஆயுதங்களுடன் சென்ற ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி  கும்பல் விடுதிக்குள் புகுந்து மாணவர் சங்க நிர்வாகிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் படுகாயம் அடைந்த ஸ்வப்னில் முகர்ஜி மற்றும் சுப்ரா நாத் ஆகியோர்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் தாக்குதலில் பல மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.  தாக்குதலில் காயமடைந்த மாணவர்களில் ஒருவரான ஸ்வப்னானில், தங்களை தாக்கிய கும்பல் விஸ்வ பாரதியின் முன்னாள் ஏபிவிபி தலைவர் அச்சிந்த பாக்தி தலைமையிலானது என்று குற்றம் சாட்டி உள்ளார். 
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா  பல்கலைக்கழக துணைவேந்தர் காரை பின் தொடர்ந்து வந்த ஏபிவிபியினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி சுப்ரியோப கங்குலி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு நாங்கள் உரிய முறையில் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.  ஜனவரி 5ஆம் தேதி ஜேஎன்யு வளாகத்தில் ஏபிவிபி உறுப்பினர்கள் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஷே கோஷ் உள்ளிட்ட பலர் கடுமையாக தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;