இத்தகைய நிவாரண உதவிகளை நேரடி யாக அளிப்பதோடு, தில்லி அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகளை இவர்களுக்குப் பெற்றுத் தர இவர்களிடமிருந்து அனைத்து விவரங்களையும் சேகரிப்பது அவசியமாக இருந்தது. எனவே, இவர்களிடையே ஆய்வு ஒன்றை நடத்தி விவரங்களை சேகரிக்க முடி வெடுக்கப்பட்டது. இதற்கான கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு, 40 பேர் அடங்கிய குழு தயா ரிக்கப்பட்டு, தொலைபேசி வாயிலாக இத் தொழிலாளர்களை அழைத்து இவ்விவரங்கள் சேரிக்கப்பட்டன.
ஏப்ரல் 10 முதல் 18 வரையிலான 9 நாட்களில் 8870 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத் தும் அவர்களது குழுத்தலைவைர்கள் 506 பேர் தொடர்பு கொள்ளப்பட்டனர். கட்டுமானத் தொழிலாளர்களையும், சாலையோரங்களில் வீசி எறியப்படும் பழைய பொருட்களை சேக ரித்து வாழ்க்கையை நடத்தி வருபவர்களை யும் தொடர்பு கொள்ள இயலாது போனதால், அவர்களது வாழ்நிலையை இந்த ஆய்வு விவ ரங்கள் பிரதிபலிக்க இயலாது போயுள்ளது.
எப்போது தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல இயலும் என்பது இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்களின் மனதில் அடிக்கடி எழும் கேள்வியாக இருந்தது. மேலும், வேலையும், வருமானமும் இல்லாமல் இருப்பதும், வாடகையை கொடுக்க முடியாத தும், பசிக் கொடுமை குறித்த அச்ச உணர்வும் இவர்களை வாட்டி வதைத்து வருவதையும் புரிந்து கொள்ள முடிந்தது என ஆய்வுப் பணி யில் ஈடுபட்ட தோழர்கள் தெரிவிக்கின்றனர்.