tamilnadu

img

5 ஆண்டுகள்... 92 நாடுகள்... மோடியின் ஊர்சுற்றல் சாதனை!

ஊர்சுற்றுவதிலும், தற்படம் எடுத்துக் கொள்வதிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர் மோடி. அதேபோல விலை உயர்ந்த ஆடைகள் அணிவதிலும், மோடியை மிஞ்சுவதற்கு ஆளில்லை. கஜினி திரைப்படத்தின் சூர்யா போல, தனது கோட் முழுவதும் நரேந்திர மோடி.. நரேந்திர மோடி..

எம்பிராய்டரிங் டிசைன் செய்து, 10 லட்சம் ரூபாய்க்கு கோட் அணிந்தவர்தான் நமது பிரதமர். அதைப் பார்த்து அமெரிக்காவின் அன்றைய

ஜனாதிபதி ஒபாமாவே ஆடிப் போனார். இதனிடையே, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான புதிய சில தகவல்கள் கிடைத்துள்ளன. மோடி கடந்த 5 ஆண்டுகளில் 92 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார் என்பது, எல்லோரும் அறிந்த செய்திதான். அதைப்பற்றி பேசும்போதெல்லாம் மோடி ஊர்சுற்றவா சென்றார்.. அரசுமுறைப் பயணமாகத்தானே சென்றார் என்று பாஜகவினர் கூறுவார்கள். அயல்

நாடுகள் உடனான நட்பையும்,அதன்மூலம் அந்நாடுகளுடனான வர்த்தகத்தையும் பெருக்கத் தான் மோடி வெளிநாடு செல்கிறார் என்று சமாளிப்பார்கள். இந்நிலையில்தான், பிரதமர் மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019 பிப்ரவரிமாதம் வரையில் 212 சர்வதேச

பயணங்களை மேற்கொண்டுள் ளார் என்றால், அவற்றில், 22 பயணங்கள் ‘அலுவல் அல்லாத’ சொந்த விஷயங்களுக்காக மேற் கொள்ளப்பட்ட பயணங்கள் என்று தெரியவந்துள்ளது. இதற்கான ஆதாரம் பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்திலேயே உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ‘நியூஸ் 18’ ஊடகம் அதை ஏற்கவில்லை. உண்மையில் மோடி 22 அல்ல 28 ‘அலுவல் அல்லாத’ பயணங்களை மேற் கொண்டிருக்கிறார் என்றும்; தாங்கள் ஆய்வு செய்த, இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ‘நியூஸ் 18’ தெரிவித்துள்ளது.

;