tamilnadu

img

40 சதவிகித பள்ளிகளில் இன்னும் மின்சாரம், விளையாட்டு மைதானம் இல்லை... அரசுப் பள்ளிகள் மேம்பாட்டில் மோடி அரசு மெத்தனம்

புதுதில்லி:
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதில், மத்திய பாஜக அரசு மெத்தனம்காட்டுவதாக, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

2020-2021 நிதியாண்டின் பள்ளிக் கல்விக்கான மானிய அறிக்கை கடந்தவாரம் மாநிலங்களவையில் தாக்கல்செய்யப்பட்டது. இதனை முன்வைத்தும்,பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டின் அளவு மற்றும் அந்த நிதி பயன் படுத்தப்பட்டது குறித்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வின் அடிப்படையிலும், நாடாளுமன்ற நிலைக்குழு மேற்கண்ட குற்றச்சாட்டை வைத்துள்ளது.“2017-18 கணக்கின் படி, நாடு முழுவதும் 40 சதவிகிதப் பள்ளிகளில் மின்சாரம் இல்லை. மணிப்பூர், மத்தியப் பிரதேச மாநிலங்களில் 20 சதவிகிதத்துக்கும் குறைவான பள்ளிகளில்தான் மின்சாரம் இருக்கிறது.அதேபோல 40 சதவிகித அரசுப் பள்ளிக்கூடங்களில் விளையாட்டு மைதானம் இல்லை. அதிலும் ஒடிசாமற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில் 70 சதவிகிதப் பள்ளிகளில் விளையாடுவதற்கு மைதானம் இல்லை. 40 சதவிகிதப் பள்ளிக்கூடங்களில் சுற்றுச்சுவர்இல்லாமல் இருப்பதால், மாணவர்களின்பாதுகாப்பு, பள்ளிகளின் சொத்து ஆகியவை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிஇருக்கிறது” என்று நிலைக்குழு தெரிவித்துள்ளது.

“அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப் படும் நிதி மற்றும் அதை முறையாகப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகளே இந்த மோசமான உள்கட்டமைப்பு பிரச்சனைகளுக்குக் காரணம்” என்று கூறியுள்ள நிலைக்குழு, “மத்திய பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு கோரப்பட்டதொகை ரூ. 82 ஆயிரத்து 570 கோடி. ஆனால், ரூ. 59 ஆயிரத்து 945 கோடியைமட்டுமே மத்திய அரசு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது. இது பள்ளிக் கல்வித்துறை கேட்டிருந்த நிதியைக் காட்டிலும் 27 சதவிகிதம் குறைவு” என சுட்டிக்காட்டியுள்ளது.

“அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள்ஆகியவற்றை போதுமான அளவில் அமைத்து, அதன்மூலம் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும். ஆனால்,அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் அரசுத் தரப்பில் மெத்தனம் காட்டப்படுகிறது” என்று பகிரங்க குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது.“கடந்த 2019-20 நிதியாண்டில், 2 ஆயிரத்து 613 திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்ட நிலையில் முதல் 9 மாதங்களில்3 திட்டங்கள் மட்டுமே முடிக்கப்பட்டுள் ளன. 1,343 ஆய்வுக்கூடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில், இயற்பியல்,வேதியியல், உயிரியல் ஆகியவற்றுக் காக 3 ஆய்வுக்கூடங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன; 135 நூலகங்கள், 74 கலை, கலாச்சார கைவினைக் கூடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அதில் ஒன்றுகூட கட்டப்படவில்லை” என்ற புள்ளிவிவரங்களும் வெளியிடப் பட்டுள்ளன.

“கல்வித்துறையில் இதுபோன்ற தாமதம் மற்றும் மந்தநிலை மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் இருந்துவிலகும் மனநிலையை உருவாக்கி விடும்” என்று எச்சரிக்கை செய்துள்ள நிலைக்குழு, “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தோடு, மனிதவள மேம்பாட்டுத்துறையும் இணைந்து செயல்பட்டால், பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவரை எளிதாக எழுப்பமுடியும். தேவையான தொழிலாளர்களைப் பெற முடியும். அதேபோல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பள்ளிகளுக்குச் சூரிய ஒளி மூலம் மின்சார வசதியை ஏற்படுத்த முடியும்” என்று பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. 

;