tamilnadu

img

ஜாமியா பல்கலைக்கழகத்தின் 24 வயது மாணவர் கைது!

புதுதில்லி:
மத்திய பாஜக அரசு, மதஅடிப்படையில் கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. 

குறிப்பாக, தில்லி ஜாமியாபல்கலைக்கழக பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தைக் குலைக்கும் விதமாக சங்-பரிவாரங்களைச் சேர்ந்த குண்டர் கள், கற்களை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் வன்முறையில் ஈடுபட்டனர். அதையும் மீறி போராட்டங்கள் தொடர்ந்தன. 

தில்லி காவல்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் மத்திய பாஜக அரசோ, பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மீதே வழக்குகளைப் போட்டு அவர்களைக் கைது செய்தது.அந்த வகையில், 2019 டிசம்பர் 16 அன்று ஜாமியா காவல்நிலையத்தில் பதிவு செய்யப் பட்ட வழக்கில், ஷாஹீன் பாக்நகர் ‘அபுல் பசல் என்க்ளே’வில் வசிக்கும் ஆசிப் இக்பால் தன்ஹா என்ற மாணவரை தில்லி காவல்துறை தற்போது கைது செய் துள்ளது.24 வயதே ஆகும் ஆசிப்தன்ஹா, ஜாமியா பல்கலைக்கழகத்தின் பாரசீக மொழித்துறையில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.சிஏஏ போராட்டத்தைத் தூண்டிவிட்டவர்களில் தன்ஹா முக்கியமானவர் என்றும் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், மீரான் ஹைதர் மற்றும் சபூரா சர்கர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்றும்
காவல்துறை குற்றம் சாட்டியுள் ளது.

;