tamilnadu

img

2019 ஆம் ஆண்டு இந்தியாவில் பதிவான 1.40 லட்சம் தற்கொலை மரணங்கள்... தற்கொலை செய்து கொண்ட 23% பேர் கூலித் தொழிலாளர்கள்....

புதுதில்லி:
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டுக்கான தற்கொலை மரணங்களின் புள்ளி விவரத்தை, தேசிய குற்ற ஆவணக் கழகம் (National Crime Records Bureau - NCRB) வெளியிட்டுள்ளது.

இதன்படி 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2019-ஆம் ஆண்டில் தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.2019-ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 123 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 381 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2018-ஆம் ஆண்டு1 லட்சத்து 34 ஆயிரத்து 516 தற்கொலைகள் பதிவாகி இருந்த நிலையில், இந்தஎண்ணிக்கை, 2019 ஆண்டில் 3.4 சதவிகிதம்அதிகரித்துள்ளது. மேலும், இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர்களில் அன்றாட கூலித் தொழிலாளர்கள் மட்டும் 32 ஆயிரத்து 583 பேர்; அதாவது ஒட்டுமொத்த தற்கொலை எண் ணிக்கையில் 23.4 சதவிகிதம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குஅடுத்ததாக தற்கொலையில் திருமணமான பெண்களின் 15.4 சதவிகிதமாக இருந்துள்ளது.இதேபோல சுயதொழில் செய்பவர்கள்11.6 சதவிகிதம், வேலையில்லாதவர்கள் 10.1 சதவிகிதம், தொழில் வல்லுநர்கள் அல்லது சம்பளம் பெறுபவர்கள் 9.1 சதவிகிதம்,விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் 7.4 சதவிகிதம், மாணவர்கள் 7.4 சதவிகிதம், ஏனைய பிரிவினர் 19 சதவிகிதம் என்றுதற்கொலை முடிவை எடுத்துள்ளனர்.

திருமணமான பெண்கள் அதிகம் தற்கொலை
தற்கொலை செய்து கொண்டவர் களில் ஆண்களின் எண்ணிக்கை 70.2 சதவிகிதமாகவும், பெண்களின் எண் ணிக்கை 29.8 சதவிகிதமாகவும் உள்ளது. ஆனால், இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் ஆனவர்களாகவே உள்ளனர்.68.4 சதவிகித ஆண்கள் திருமணமானவர்கள். 62.8 சதவிகித பெண்கள் திருமணமானவர்கள்.இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில், தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் ஆண்களின் சதவிகிதம் 70.2 சதவிகிதம் என்றாலும், திருமணமான ஆண்களின் தற்கொலை சதவிகிதம்என்று வரும்போது அது 68.4 சதவிகிதமாக குறைகிறது. மாறாக ஒட்டுமொத்த தற்கொலையில் 29.8 ஆக மட்டுமே இருக்கும் பெண்களின் விகிதம், திருமணமான பெண்கள் என்று வரும்போது, இருமடங்காக அதிகரித்து 62.8 சதவிகிதமாகி விடுகிறது. என்சிஆர்பி புள்ளி விவரத்தில் இது ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.

வேலையற்ற இளைஞர்கள் 10 சதவிகிதம் பேர்
வேலையின்மை (Unemployment) காரணமாக குறைந்தது 2 ஆயிரத்து851 பேர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றப்பதிவு ஆவணத்தில் காட்டப் பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டிலும், வேலையின்மை காரணமாக 2 ஆயிரத்து 741 பேர்தற்கொலை செய்து கொண்டதாக கூறப் பட்டிருந்தது.உண்மையில், வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் என்பது என்சிஆர்பி வெளியிட்ட புள்ளிவிவரத்திலேயே மற்றொரு இடத்தில் வெளிப்பட்டுள்ளது.தற்கொலைகளுக்கான காரணங்களில் அதிகபட்சமாக குடும்பப் பிரச்சனை 32.4 சதவிகிதம், திருமணம் தொடர்பான பிரச்சனைகள் 5.5 சதவிகிதம், உடல்நலப் பாதிப்பு 17.1 சதவிகிதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாடு முழுவதும் தற்கொலை செய்துகொண்ட 1 லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர்களில், 10.1 சதவிகிதம் பேர்- அதாவது 14 ஆயிரத்து 19 பேர் வேலையில்லாமல் இருந்து வந்தவர்கள் என்று தேசிய குற்றப் பதிவு ஆவணம் தெரிவிக்கிறது. அதுமட்டுமன்றி, வேலையின்மை காரணமாக தங்கள் உயிரைமாய்த்துக் கொண்டவர்களில் பெரும் பாலோர் 18-30 வயது வரம்பில் உள்ளவர்கள்என்பதையும் தரவு காட்டுகிறது. 

மகாராஷ்டிரா முதலிடம் நாட்டிலேயே அதிகமான தற்கொலை
கள் நிகழ்ந்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 18 ஆயிரத்து 916 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாடு, மேற்குவங்கம், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. 49.5 சதவிகித தற்கொலைகள் இந்த 5 மாநிலங்களில் மட்டும் நிகழ்ந்துள்ளன. மேலும், பெரிய அளவில், குடும்பமாக தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தமிழ்நாட்டில் 16, ஆந்திரப் பிரதேசத்தில் 14, கேரளாவில் 11, பஞ்சாபில் 9, ராஜஸ் தானில் 7 எனப் பதிவாகியுள்ளன.

படித்தவர்களே அதிகம்
தற்கொலை முடிவு எடுத்தவர்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு பெற்றவர்களாகவே இருக்கின்றனர். முறைப் படியான கல்வியறிவு பெறாதவர்களில் 12.6 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். துவக்க கல்வி மட்டும் பெற்றவர்களில் 16.3 சதவிகிதம் பேரும், நடுநிலைக்கல்வி பெற்றவர்களில் 19.6 சதவிகிதம் பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பத்தாம் வகுப்புவரை படித்தவர்கள் அதிகபட்சமாக 23.3 சதவிகிதம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பட்டதாரிகளும் (3.7 சதவிகிதம்) விதி விலக்கில்லை.

;