ஏழு நாட்களில் கொ ரோனாவைக் குணப் படுத்தும் என்று கூறி ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள ‘கொரோ னில் ஸ்வாசரி’ என்ற ஆயுர்வேத மருந்துக்கு, மத்திய ஆயுஷ்துறை ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில், பதஞ்சலியின் போலி மருந்துகளை தங்கள் மாநிலங்களில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகா ராஷ்டிரா, ராஜஸ்தான் எச்சரித்துள்ளன.