tamilnadu

img

100 நாள் வேலைத் திட்ட நிதியில் ரூ. 9,500 கோடி வெட்டு!

புதுதில்லி:
ஊரகப் பகுதியில் நீர்நிலை, சாலை மேம்பாட்டுத் திட்டங்களை செயல் படுத்தும் வகையிலும், கிராமப்புற மக்களுக்கு 100 நாட்களாவது வேலை கிடைப்பதைஉத்தரவாதம் செய்வதற்காகவும் கொண்டுவரப்பட்டது, மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதித் திட்டமாகும். எதிர்பார்த்தபடியே நாட்டின் பொருளாதாரத்திலும், கிராமப்புறமக்களின் வாழ்க்கையிலும் இந்த திட்டம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், 2014-இல் ஆட்சிக்கு வந்தது முதலே மோடி அரசு, இதற்கான நிதிஒதுக்கீட்டைக் குறைத்து, திட்டத்தையே ஒழித்துக்கட்டும் வேலைகளில் இறங்கியது. 2020-21 பட்ஜெட்டிலும் அது தற்போது எதிரொலித்துள்ளது.

2019-20 நிதியாண்டில், ரூ. 71 ஆயிரம் கோடியை மோடி அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. இதுவே குறைவான நிதி ஒதுக்கீடு என்று எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில்,நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள, 2020-21 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில்அந்த நிதி மேலும் வெட்டப்பட்டு, ரூ. 61 ஆயிரத்து 500 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரூ. 9 ஆயிரத்து 500 கோடி (சுமார் 13 சதவிகிதம்) குறைவாகும்.அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜேந்திரன் நாராயணன் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில், “100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நம்பியிருக்கும் ஏழை மக்களைப் பரிகாசம் செய்வது போன்று இந்த நிதிஒதுக்கீடு உள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

;