tamilnadu

திரிபுரா மேற்குத் தொகுதியில் மறுதேர்தல் நடக்குமா? எதிர்க்கட்சிகளின் மனுக்களை ஏற்றது உச்சநீதிமன்றம்

புதுதில்லி, மே 12-திரிபுரா மேற்குத்தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். திரிபுரா மேற்குத் தொகுதியில் ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற தேர்தலின்போது ஆளும் பாஜக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு மொத்தம் உள்ள வாக்குச்சாவடிகளில் இரண்டு பங்கிற்கும் மேலான வாக்குச் சாவடிகளில் மோசடியில் ஈடுபட்டது. வாக்களிக்க வந்த வாக்காளர்களை விரட்டியடித்தது. இதுதொடர்பாக தக்க சான்றாவணங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தலைமைத் தேர்தல்ஆணையத்திற்கு மனுக்கள் அளித்தன. திரிபுரா மேற்குத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல்நடத்த வேண்டும் என்றும் கோரின. எனினும் தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கேவரும் மே 12 அன்று 168 வாக்குச் சாவடிகளில்மட்டும் தேர்தல் நடத்திட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியும் காங்கிரஸ் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன.மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், எனினும் இதனைஅவசர வழக்காக எடுத்துக்கொள்ளவில்லை, எனவே இதனை விசாரிப்பதற்கான தேதியும் குறிப்பிடவில்லை.இவ்விவரங்களை இடது முன்னணி தலைவர் பிஜன் தர் தெரிவித்தார். (ந.நி.)

;