tamilnadu

வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசு முதலமைச்சர் நாராயணசாமி சாடல்

புதுச்சேரி,பிப்.29- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி கள் ஒன்றைகூட மத்திய பாஜக அரசு  நிறைவேற்றவில்லை என்று முதல்வர்  நாராயணசாமி குற்றம் சாட்டினார். புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி சனிக்கிழமை (பிப். 29) செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- நான்கு மாதங்களுக்கான மத்திய  அரசின் வளர்ச்சி விகிதம் தற்போது  வெளியாகியுள்ளது. அதில் 5 விழுக்  காட்டில் இருந்து 4.7 விழுக்காடாக குறைந்துள்து. இந்தியாவின் சரித்தி ரத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.  இதற்கு மத்திய பாஜக அரசின்  தவறானபொருளாதார கொள்கை, வேலைவாய்ப்பின்மை, தொழிற் சாலை மூடுதல், அந்நிய நாட்டு மூலத னம் வராதது, உற்பத்தி தொழிற் சாலைகளில் உற்பத்தி குறைந்தது, கட்டுமானபணிகள் முடங்கியுள்ளதே முக்கிய காரணம்.  மக்களுக்கு கொடுத்த திட்டம் ஒன்றைகூட மத்திய பாஜக அரசு நிறைவேற்றாதது ஆகியவைதான் முக்கிய காரணம். இதிலிருந்து மக்  களை திசை திருப்பவே, குடியிருமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் கலவரம் நடந்து வருகிறது. காரைக்கால் என்ஐடி பட்ட மளிப்பு விழாவில் பங்கேற்க வந்தி ருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, புதுச்சேரி தலைமை செய லக வளாகத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் என்னென்ன திட்டங்கள்  நிறைவேற்ற வேண்டும் என்று ஆலோ சனை நடத்தினார். அப்போது ரூ.130 கோடியில் மதகடிப்பட்டிலிருந்து புதுச்சேரி வரை 4 வழிச் சாலை  அமைக்க வரைப்படம் தயாரித்து  கொடுத்துள்ளோம். இதில் சங்கரா பரணி ஆற்றில் ஆரியபாளையத்தில் புதியதாக பாலம் கட்டுவதும் இடம் பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான பணி மதகடிப்பட்டில் ஆரம்பிக் கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்தால் நெரிசலை தவிர்க்க முடியும். இதற்கும் மத்திய அமைச்சர்ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய பாலங்கள்
கடலூரிலிருந்து நகரப்பகுதிக்கு வருவதற்கு சுமார் 45 நிமிடமாகு கிறது. எனவே, முருங்கப்பாக்கம் பாலத்திலிருந்து சிவாஜிகணேசன் சிலை வரைக்கும் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு எக்ஸ்பிரஸ்வே (துரித சாலை) ரூ.300 கோடியில் அமைக் கும் திட்டத்திற்கும் மேம்பாலம் கட்டு வதற்கும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு அனுமதி கிடைத்துள்ளது.  இந்த பணி உடனடியாக துவங்  கப்படும். எங்கெங்கு சாலைகள் அக லப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் அகலப்படுத்தப்படும். முருங்கப் பாக்கம், நைணார்மண்டபம் பகுதி யில் பாலங்கள் கட்டப்படும். இந்த  பணியால் கடலூரிலிருந்து சென்னை  செல்ல நெரிசலில் சிக்காமல் செல்ல  முடியும், இந்த அறிவிப்பு வரவேற்க தக்கது. இவ்வாறு முதலமைச்சர் தெரி வித்தார்.

;