tamilnadu

img

விஞ்ஞானிகளின் சாதனையை தனதாக்கிய மோடி தேர்தல் ஆணையரிடம் சீத்தாராம் யெச்சூரி புகார்

விண்வெளி அறிவியலில் இந்திய விஞ்ஞானிகள் எட்டியுள்ள சாதனைகளை நாட்டின் பிரதமர் தனதாக்கிக் கொண்டு அறிவிப்பது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தலைமைத் தேர்தல் ஆணை யருக்குக்கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதி யுள்ள கடிதத்தில் உள்ள விவரங்கள் வருமாறு: பூமியை ஆய்வு செய்திடும் செயற்கைக் கோளை ஏவு வதில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டு தல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய வல்லமையை இந்தியா பெற்றிடும் என்று 2012இலேயே நமது ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஸ்தாபனத்தின் தலைவர் (Chief of DRDO) தெரிவித்திருந்தார். வரவிருக்கும் காலங்களில் இந்திய விஞ்ஞானிகள் மேலும் மேலும் அளப்பரிய சாதனைகளைப் படைத்திட இருக்கிறார்கள் என்பது நிச்சயம். இத்தகு விஞ்ஞானிகளின் சாதனைகள் நாட்டை மிகவும் பெருமைகொள்ள வைக்கிறது. இத்தகு சாதனைகளைப் படைத்துள்ள நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  ஆனால் இத்தகைய வெற்றிகளை டிஆர்டிஓ போன்ற சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்கள்தான் அறிவித்திட வேண்டும். மாறாக நாட்டின் பிரதமர் அதனை தனதாக்கிக்கொண்டு அறிவித்திருக்கிறார். அதுவும் தேர்தல் பிரச்சாரத்தின் இடையே இதனைப் பிரதமர் அறிவித்திருக்கிறார். அவரும் ஒரு வேட்பாளராக ஒரு தொகுதியில் போட்டியிடும் நிலையில் இதனை அறிவித்திருக்கிறார். நிச்சயமாக இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இவ்வாறு பிரதமர் அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு முன்னரே தெரியுமா என்பதையும், தேர்தல் ஆணையம் அதனைப் பரிசீலனை செய்து அவ்வாறு நாட்டிற்கு அறிவித்திட பிரதமருக்கு அனுமதி அளித்ததா என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்திய விஞ்ஞானிகள் எய்திய சாதனை களை நாட்டின் பொதுத் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் அரசியல் வண்ணம் தீட்டக்கூடிய விதத்தில் தேர்தல் ஆணை யம் அனுமதித்திருப்பதற்கு சிறப்புக் காரணங்கள் ஏதேனும் இருக்குமாயின் அதனை ஒட்டுமொத்த நாடும் அறிந்துகொள்ள விரும்புகிறது. இவ்வாறு யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.

(ந.நி.)

;