tamilnadu

சென்டாக் விண்ணப்பங்களை ரத்து செய்ய எஸ்.எப்.ஐ கோரிக்கை

புதுச்சேரி, ஜூலை 20- சென்டாக் விண்ணப்ப கட்டணங் களை ரத்து செய்ய இந்திய மாணவர்  சங்கம் புதுவை அரசை வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து  சங்கத்தின்  பிரதேச  தலைவர் ஜெயபிரகாஷ் வெளியிட்  டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசின் சார்பில் ஒருங்கி ணைந்த மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஜூலை 20ஆம் தேதி  முதல் வழங்கப்படும்  என்று  கல்வித்  துறை அமைச்சர்  கமலக்கண்ணன் தெரிவித்திருந்தார்.  விண்ணப்பங் கள் வெளியிடப்படும் என்று கூறிய  அமைச்சர் அவர்கள் விண்ணப் பத்திற்கான கட்டணம் எவ்வளவு என்  பதை தெரிவிக்கவில்லை.  இந்நிலை யில் 20ஆம் தேதி முதல் அரசு பள்ளி  மாணவர்களுக்கான விண்ணப்பங் களை பூர்த்தி செய்வதற்கு தாங்கள்  படித்த பள்ளியிலேயே கணினி ஆய்  வகத்தில் மாணவர்கள் இலவசமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய லாம் என்ற அறிவிப்பை வெளியிட்டி ருந்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கத்தால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப கட்டணங்கள் தனியார் கல்லூரிகளை விட அதிகளவில் நிர்ணயித்துள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் கடந்த வாரம் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  நடப்பு கல்வி ஆண்டிற்  கான மாணவர் சேர்க்கை கட்டணங்  களை முழுவதுமாக ரத்து செய்ய  வேண்டும் என வலியுறுத்தி உள்ள  சூழலில், புதுவை அரசின் கீழ்  இயங்கும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களுக்கு ஆயிரக் கணக்கில் கட்டணக் கொள் ளையில் ஈடுபடுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. பொருளாதார ரீதியில் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களையும் வருமா னத்தையும் இழந்து இருக்கும் சூழ லில்  மாணவர்களின் உயர் கல்விக்  கான விண்ணப்பக் கட்டணங்கள் ரத்து செய்வதற்கு மாறாக உயர்த்தி யுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. எனவே அரசு உடனடியாக சேர்க்கை  கட்டணத்தை முழுவது மாக ரத்து செய்ய வேண்டும் என  இந்திய மாணவர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.  இல்லையென்றால் அனைத்து மாணவர் மற்றும் சமூக அமைப்புகளைத் திரட்டி அரசுக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;