tamilnadu

img

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைவேடு ஆகியவற்றை கண்டித்து  மாணவர் - வாலிபர் அமைப்புகள் சார்பில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாணவர் அணிச் செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார்.  வாலிபர் சங்க பிரதேசத் தலைவர் ஆனந்து, செயலாளர் சரவணன், பொருளாளர் பாஸ்கர், மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பிர் செம்மலர், பிரதேசக்குழு உறுப்பினர் நரேன், இளைஞர் பெருமன்ற மாநிலத் தலைவர் அந்தோணி, மாணவர் பெருமன்றத்தின் தலைவர் எழில், மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.