tamilnadu

img

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13-ஆம் தேதியும் முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள்  பொங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரியிலும், திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன் பேரில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13-ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 19-ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு, புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திங்கட்கிழமை விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் (பிப்ரவரி) மாதம் 8-ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

;