tamilnadu

img

புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

காரைக்கால், செப்.1- நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையை போக்கி அதனை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நிதி அமைச்சர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் யாருக்கும் அக்கரை இல்லை. மாறாக எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். காரைக்காலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாட்டின் பொருளாதாரம் தற்போது மந்தநிலைக்கு வந்துவிட்டது. வேலைவாய்ப்புகள் இல்லை. மோட்டார் வாகனங்களை வாங்க ஆள் இல்லை. 31 % தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவேன் என்றார். ஆனால் தற்போது 5 கோடி பேர் வேலை இழந்ததுதான் அவரது ஆட்சியின் பெருமை என்று  கூறினார்.