பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் உள்ள மத்திய தொழிலாளர் துறை இணை அலுவலகம் அருகே பிஎஸ்என்எல் ஊழியர் சங்க புதுச்சேரி பிரதேசத் தலைவர் கொளஞ்சியப்பன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் இதில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், கே.டி.சம்பந்தம், செல்வம், பிரதீபா, விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தொழிலாளர் நல இணை ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.