tamilnadu

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்கும்

புதுச்சேரி, ஜூன் 16- தனியார் மருத்துவமனைகள் கொரோனா  தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யும் என்று  புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் 216 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில்  99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள னர். 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தனர். 113 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். புதுவையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. மே 15 முதல் ஜூன் 15 வரை கொரோனா தொற்று 7.3 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் 50 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பு உள்ளது.

மருத்துவ வல்லுநர்கள் கொரோனா தொற்று தாக்கம் நவம்பர், டிசம்பர் வரை இருக்கும் என தெரிவிக்கின்றனர். அவ்வாறு நீடித்தால் மருத்துவ உபகரணங்கள் தேவைப்  படும். இது தொடர்பாக முதல்வரிடம் வலி யுறுத்துவேன். மேலும் தேவைப்படும் மருத்து வர்கள், செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படை யில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சில நோயாளிகள் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற அனுமதி கோருகின்றனர். வெளிமாநிலங்களில் நாள் ஒன்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.40 ஆயிரம் வரை கட்டணம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. புதுவையில் குறைந்த கட்டணம் நிர்ண யிக்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும். கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முகக் கவசம் அணிவது, அடிக்கடை கிருமி நாசினி கொண்டு கைகளை  சுத்தம் செய்து கொள்வது, தனிமனித இடை வெளியை கடைபிடிப்பது ஆகியவைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;