tamilnadu

img

சாதிச் சங்க மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு தூதர்- நீதிபதிகள்!

புதுதில்லி:
கேரள மாநிலம் கொச்சி நகரில்நடைபெற்ற குறிப்பிட்ட சாதிச்சங்கத்தின் மாநாட்டில், உயர் நீதிமன்ற நீதிபதிகளும், வெளிநாட்டு தூதர் ஒருவரும் கலந்து கொண்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கொச்சி நகரில்‘தமிழ் பிராமணர்களின் உலகமாநாடு’ (Tamil Brahmins’ GlobalMeet 2019) என்ற பெயரில், கடந்தஜூலை 19 முதல் 21 வரை மாநாடுநடத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில்தான், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக் கும் அனிதா சுமந்த் மற்றும் கேரளஉயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சிதம்பரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர். நெதர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதர் வேணு ராஜமோனி என்பவரும் இந்த மாநாட்டில் பேசியுள்ளார்.அது மட்டுமல்ல, “பிராமணர்கள் இருபிறப்பாளர்கள்; அவர்கள் எப்போதும் தலைமைப் பொறுப்பில் தான் இருக்க வேண்டும். மேலும், சாதிவாரி இடஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்காக அவர்கள் போராட முன்வர வேண்டும்” என்றெல்லாம் சிதம்பரேஷ் என்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி, நீண்ட உரையும் ஆற்றியுள்ளார்.இந்நிலையில், அரசின் உயர் பதவிகள், அதுவும் அரசியல் சாசனப் பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், எவ்வாறு ஒருசாதி மாநாட்டில் கலந்து கொண் டார்கள்? என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

;