tamilnadu

ஆசியா கண்டத்தில் அதிக கொரோனா தொற்று பாதித்த நாடு இந்தியா - ஐபிஎச்ஏ

ஆசியா கண்டத்தில் கொரோனா தொற்றுக்கு இந்தியா கடுமையாக பாதித்துள்ளது என இந்திய பொது சுகாதார சங்கத்தினர் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுவரை, இந்தியாவில் சுமார் 36 லட்சம் கொரோனா தொற்றுகளும், 64,469 இறப்புகளுடன் பதிவாகியுள்ளன.

ஆசியா கண்டத்தில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா, தற்போது தினசரி பதிவாகும் புதிய கொரோனா தொற்றுகள் 30 சதவிகிதமும், உலகளவில் தினசரி இறப்புகளில் 20 சதவிகிதமாகவும் உள்ளன. இருப்பினும், நாடு முழுவதும் அதன் உச்சம் இன்னும் சிறிது தொலைவில் இருக்கலாம் என்று இந்திய பொது சுகாதார சங்கத்தின் (ஐபிஹெச்ஏ) நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் குறித்த மூன்றாவது கூட்டு அறிக்கையை பொது சுகாதார நிபுணர்களின் பணிக்குழு வெளியிட்டுள்ளனர். இதில், இந்தியாவில் ஒட்டுமொத்த குணமடைந்தவர்கள் 2.3 மில்லியனாக இருப்பதாகவும், சீர்படுத்தப்பட்ட இறப்பு விகிதம் (சி.சி.எஃப்.ஆர்) படிப்படியாக குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 2020 இல், இந்தியாவின் புகழ்பெற்ற பொது சுகாதார நிபுணர்களின் கூட்டு பணிக்குழு ஐபிஹெச்ஏ வால் அமைக்கப்பட்டது. மேலும் நாட்டில் உள்ள கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்திய தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கம் (ஐஏபிஎஸ்எம்) இதனை உருவாக்கினார்கள். ஊரடங்கு தளர்வு காரணமாக இரண்டு மாதங்களில் தினசரி புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 9,472 ஜூன்  5, 61,749  ஆகஸ்ட் 23 வரை அதிக அளவில் கொரோனா தொற்றுகள் அதிகரித்தது.  இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொரைக்கு 2,251 கொரோனா தொற்றுகள் உள்ளன.

கொரோனா தொற்றுகள் சமூகப் பரவலைக் குறிக்கும் இந்த நோய் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பரவியுள்ளது என்பதை செரோ ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் செரோ-கண்காணிப்பு அறிக்கைகள், 'சோதனை, சுவடு, சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல்' ஆகியவற்றின் தற்போதைய திட்டத்தின் மூலம், சார்ஸ், கோவிட் நோய்த்தொற்றின் மொத்த மதிப்பிடப்பட்ட நிகழ்வுகளில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நாங்கள் கண்டறிந்து வருகிறோம். இதுவரை, இந்தியாவில் சுமார் 36 லட்சம் கொரோனா தொற்றுகளும், 64,469 இறப்புகளுடன் பதிவாகியுள்ளன. இன்றுவரை, கொரோனாவிற்கு இந்தியா 4,23,07,914 சோதனைகளை நடத்தியுள்ளது. மேலும் குறைந்தது 8,46,278 சோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்டுள்ளன.