புதுச்சேரி, ஜூலை 16- புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.32 சதவித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி யைச் சேர்ந்த 6 ஆயிரத்து 792 மாணவர்கள், 7 ஆயி ரத்து 779 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 571 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய மாணவர்க ளின் தேர்வு முடிவுகள் வியா ழனன்று புதுச்சேரி தேர்வுத் துறை சார்பில் வெளியிடப் பட்டது. அதில் 13 ஆயிரத்து 36 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாண வர்கள் 6 ஆயிரத்து 12, மாணவிகள் 7 ஆயிரத்து 294. இந்த ஆண்டு தேர்ச்சி சத வீதம் 91.32 ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.62 சத வீதம் குறைவு. புதுவை மாநிலத்தில் அரசு பள்ளி களில் மொத்தம் 6 ஆயி ரத்து 161 பேர் தேர்வு எழு தினர். இதில் 5 ஆயிரத்து 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி சதவீதம் 81.97 ஆகும். இது கடந்த ஆண்டை விட 3.65 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.