கொரோனா பேரிடர் நிவாரணத்திற்கு கிராமப் பொதுநிதியை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் பகிர்ந்தளித்துள்ளது ஒரு கிராமம். மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டி அருகே உள்ளது திருமாணிக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்டது தி. மீனாட்சிபுரம். கொரோனாவில் வேலை யிழந்து வாழ்வாதாரம் இழந்து நிற்கும் விவ சாயிகள் விவசாயத் தொழிலாளர்களின் நிலையை அறிந்த கிராமத்தினர் ஒன்று கூடி கடந்த பங்குனி மாத கோவில் திருவிழா விற்கு மக்களிடம் வரி வசூலித்துள்ளனர். இதில் செலவு போக சுமார் ரூ.7 லட்சம் பொது நிதியாக இருப்பு இருந்துள்ளது. இதில் இருந்து 25 ஆயிரம் ரூபாயை மட்டும் இருப்புத் தொகையாக வைத்துக் கொண்டு மீதமுள்ள 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை ஊரிலுள்ள 225 குடும்பங்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்தை கொரோனா பேரிடர் நிதி யாக வழங்கியுள்ளனர்.