tamilnadu

கொரோனா செப்டம்பரில் முடிவுக்கு வரலாம் பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் கணிப்பு

புதுதில்லி, ஜூன் 8- இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில்தான் முடிவுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் இரு மருத்துவ வல்லுநர்கள் மேற்கொண்ட புதிய கணித ரீதியிலான ஆய் வில் கணித்துள்ளனர் மத்திய சுகாதாரத்துறை அமைச்ச கத்துக்கு உட்பட்ட பொதுசுகாதாரத் துறை இயக்குநரகத்தின் துணை இயக்கு நர் மருத்துவர் அனில் குமார், இணை இயக்குநர் மருத்துவர் ரூபாலி ராய் ஆகியோர் எப்டமாலஜி இன்டர்நேஷ னல் எனும்ஆன்-லைன் இதழில் தங்க ளின் ஆய்வுகளை வெளியிட்டுள்ளனர் இவர்கள் இருவரும் கொரோனா போக்கு, பரவல் குறித்து ஆய்வு நடத்த  பெய்லி கணித மாதிரியை பயன்படுத்தி யுள்ளனர். கொரோனாவில் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, முழுவதும் குணம டைந்து சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் ஆகிய மூன்றையும் கணக்கில் கொண்டுள்ளனர்.

இந்த இரு மருத்துவர்களும், தொடர் தொற்று வகையை (‘continu ous infection’ type) பயன் படுத்தியுள்ளனர்.  பாதிக்கப்பட்ட மொத்த மக்கள்தொகையில் குணமடைந்த வர்கள்,  இறந்தவர்களை கணக்கிட்ட பிறகு சிகிச்சையில் உள்ளவர்கள் கணக் கிடப்பட்டுள்ளனர். மொத்த தொற்று வீதத்திற்கும் மொத்த மீட்பு வீதத்திற்கும் இடையிலான உறவு குறித்த முடிவுகளைப் பெற, ரிக்ரஷன் அனாலிசிஸ் செய்துள்ளனர். மருத்துவர்களின் தகவல்படி  இந்தியாவில் உண்மையான தொற்று நோய் மார்ச் 2- ஆம்தேதி தொடங்கி யது. அதன் பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கொரோனா தொற்றுக்கான இரண்டாவது தரவை பகுப் பாய்வு செய்வதற்கு, World ometers.info- விலிருந்து (மார்ச் 1-ஆம் தேதி முதல் மே 19-ஆம் தேதி வரை) இந்தியாவில் பதிவாகியுள்ள தொற்றுக ளின் எண்ணிக்கையையும், குணம டைந்தவர்கள், இறந்தவர்களின் எண் ணிக்கையையும்  பயன்படுத்தி யுள்ளனர்.

பின்னர் பெய்லி ரிலேட்டிவ் ரிமூவல் ரேட்(பிஎம்ஆர்ஆர்ஆர்) முறை மூலம் இந்தியாவில் கொரோனா குறித்து ரிக்ரஷன் அனாலிஸிஸ் செய்துள்ளனர். அப்போது அந்த நேர்கோடு செப்டம்பர் நடுப்பகுதியில்தான் 100 சதவீதத்தை அடையும்(அதாவது பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கையும், குண மடைந்தவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கலாம்) அப்போதுதான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு  முழுமையாகக் குறையும எனத் தெரி விக்கிறது.  மக்கள் மற்றும் சுற்றுச்சுழல் ஆகியவற்றோடு தொடர்புடைய மாறக் கூடிய காரணிகளை அரசுகள் கண்டிப்பாக கட்டுக்குள்கொண்டு வரவும் மாற்றவும் முயற்சிக் வேண்டும். இதனால் பிஎம்ஆர்ஆர்ஆர் நேர்கோடு தொடர்ந்து மேல்நோக்கி செல்லும். அதாவது தனிமைப்படுத்தப் பட்ட பகுதிளில் மேலும் கொரோனா  பரவாமல் கட்டுப் படுத்தவும், தொற்றுப்பரவலைக் குறைக்கவும் மத்திய ,மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. லைவ் மின்ட் இணையதள தகவல்களிலிருந்து