புதுச்சேரி, பிப். 2- குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து புதுச் சேரியில் நடைபெற்ற கை யெழுத்து இயக்கத்தை முதல்வர் வே. நாராயண சாமி துவக்கி வைத்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதுவையில் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் ஆர் சிவா எம்எல்ஏ தலைமை தாங்கினார். கையெழுத்து இயக் கத்தை முதலமைச்சர் வே.நாராயணசாமி துவக்கி வைத்து பேசுகையில், மத்திய அரசு குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா அமல்படுத்திதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்தி இந்து ராஷ்ட்ரம் அமைக்க பாஜக முயற்சிக்கிறது. புதுவையில் அதை நிறைவேற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வருகிற 12ஆம் தேதி சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி, மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த் தும், இச்சட்டத்தை நிறை வேற்றிய மத்திய அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதற் காக மத்திய மோடி அரசு எங்கள் மீது என்ன நட வடிக்கை எடுத்தாலும் அதனை எதிர்கொள்வோம் என்று அவர் பேசினார்.