2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வரியா கொரோனா காலங்களில் உள்நாட்டு விமானங்களில் 60 சதவிகிதம் விமான நிறுவனங்களை இயக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
கொரோனா தொற்று காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வரை கொரோனாவிற்கு முந்தைய உள்நாட்டு பயணிகள் விமானங்களில் அதிகபட்சமாக 60 சதவிகிதம் இயக்க முடியும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி உத்தரவு மூலம் 60 சதவிகித வரம்பு குறித்து விமான நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தது. அக்டோபர் 29 ஆம் தேதி மத்திய மைச்சகம் ஒரு புதிய உத்திரவை வெளியிட்டது. செப்.,2 உத்தரவு பிப்ரவரி 24, 2021 அன்று 23.59 மணி வரை அமலில் உள்ளது. ஜூன் 26 அன்று காரோண முந்தைய உள்நாட்டு விமானங்களில் அதிகபட்சமாக 45 சதவிகிதத்தை இயக்க விமான நிறுவனங்கள் அனுமதித்தது.
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மீ, 25 முதல் அமைச்சகம் உள்நாட்டு பயணிகள் சேவைகளை மீண்டும் துவங்கியது. இருப்பினும், விமான நிறுவனங்கள் கொரோனா காலத்திற்கு முந்தைய உள்நாட்டு விமானங்களில் 33 சதவிகிதத்திற்கு மேல் இயக்க அனுமதிக்கவில்லை. உள்நாட்டு விமானங்களில் எண்ணிக்கையில் 45 சதவிகித வரம்பை விதித்த ஜூன் 26 ஆம் தேதி உத்தரவை மாற்றியமைத்தது. அமைச்சகம் செப்.,2 ஆம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது. 45 சதவிகித திறன் 60 சதவிகிதாக திறனாக மாற்றியமைக்கப்படலாம் என கூறியது. தொற்று காரணமாக மார்ச் 23 முதல் நாட்டி திட்டமிட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், சிறப்பு சர்வதேச விமானங்கள் மே மாதத்திலிருந்து வந்தே பாரத் மிஷனின் கீழ் மற்றும் ஜூலை முதல் பல்வேறு நாடுகளுடன் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு விமான குமிழி ஒப்பந்தங்களின் கீழ் இயங்கி வருகின்றன.