குஜராத்தில் வீடியோ ஆதாரம் வெளியானது
சூரத், மே 9- குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து உ.பி. மாநிலம் செல்ல முயன்ற புலம் பெயர் தொழிலாளர்களிடம், பாஜக பிர முகர் ஒருவர் தலைக்கு ரூ. 1000 லஞ்சம் கேட்ட சம்பவம் நடந்துள்ளது. சூரத் பகுதி பாஜக கவுன்சிலராக இருப்பவர் அமித் ராஜ்புத். இவரது சகோ தரர் அமர் ராஜ்புத். இவர்தான் தொழி லாளர்களிடம் பேரம் பேசியுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த சுமார் 80 புலம்பெயர் தொழி லாளர்கள், தங்களின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்திற்கு செல்ல முடியா மல் தவித்து வந்துள்ளனர்.
அப்போது அவர்களை அணுகிய அமர் ராஜ்புத், உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறி, அதற்கு தனக்கு ஆளொன்றுக்கு ரூ. 1000 விகிதம் ரூ.80 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று பேசியுள்ளார். இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளி யிட்டதை அடுத்து, பாஜக பிரமுகர் லஞ் சம் கேட்ட விவகாரம் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக் கான 85 சதவிகித ரயில் கட்டணத்தை ஏற் பதாக கூறி, ஆனால் அதனை வழங்கா மல் மத்திய பாஜக அரசு ஏமாற்றி வரும் நிலையில், பாஜக கட்சியினரும் தங்கள் பங்கிற்கு தொழிலாளர்களிடமே பணம் பறிப்பில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.