tamilnadu

img

பாலகோட் தாக்குதலால் ரூ. 300 கோடி இழப்பு

புதுதில்லி:

பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் விதித்த தடையால், ‘ஏர் இந்தியா’ நிறுவனம் ரூ. 300 கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளது.


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி என்ற வகையில், கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் மூலம் 350-க்கும் அதிகமான பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாக பாஜக தலைவர்கள் கூறிக்கொண்டனர்.


இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, பாலகோட் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கை என்ற அடிப்படையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு மேல் பறப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதனால் இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் செல்லும் மற்றும் பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவை நீண்டநேரம் பிடிக்கக் கூடிய, மாற்றுப் பாதையில் சுற்றிச்சென்று வருகின்றன. 

இதனால், விமானங்களுக்கு கூடுதல் எரிபொருள் செலவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்திய அரசின் விமான நிறுவனமான ‘ஏர் இந்தியா’, பாகிஸ்தான் தடை காரணமாக கூடுதல் செலவைச் சந்தித்து வருகிறது. கடந்த ப்பிரவரியில் இருந்து இப்போது வரை ரூ. 300 கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளது.

;