tamilnadu

புதுச்சேரி இடைத்தேர்தல் காங். வேட்பாளர் ஜான்குமார்

புதுச்சேரி செப். 28- புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வைத்திலிங்கம், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் காமராஜர் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான் குமார் போட்டியிடுவார் என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். இவர் புதுச்சேரி அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக பதவி வகித்து வந்தார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஜான்குமார் தேர்தலில் போட்டியிடுவார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுக இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.