tamilnadu

img

புதுச்சேரி பல்கலை பதிவாளர் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (பி.டி.யு) பதிவாளரை இடைநீக்கம் செய்து துணைவேந்தர் பிறப்பித்த உத்தரவை, சில மணி நேரங்களிலேயே அம்மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை நிர்வாகம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருப்பவர் ஜி.சிவராஜ். இவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதற்காகவும், ஊழல் மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கும் வரை அவரை இடைநீக்கம் செய்து, துறை ரீதியான விசாரணைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.மோகன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பதிவாளரை இடைநீக்கம் செய்து துணைவேந்தர் பிறப்பித்த உத்தரவை, சில மணி நேரங்களிலேயே அம்மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை நிர்வாகம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

;