tamilnadu

img

புதுச்சேரி: டிச.6 முதல் 1லிருந்து 8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு  

டிசம்பர் 6 முதல் 1லிருந்து 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டன. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதனடிப்படையில், டிசம்பர் 6 முதல் 1லிருந்து 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8 ஆம் தேதி முதல் 1லிருந்து 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

;