tamilnadu

ஜூன் 16 ல் புதுவை சட்டப்பேரவைத்  தலைவர் தேர்தல்....

புதுச்சேரி:
புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் தேர்தல் ஜூன் 16ல் நடைபெறுகிறது.புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 16ல் கூடுகிறது. அன்றைய தினம் பேரவைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் கூட்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.அன்றைய தினமே பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தவும் அனுமதி தந்துள்ளார்.தேர்தல் நியமன சீட்டுகளை பேரவை செயலரிடம் பெறலாம். நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தனித்தனியாக அனுப்பியுள்ளோம். அலுவல் நடத்தை விதிப்படி நியமனச்சீட்டுகளை வரும் ஜூன் 15ஆம் தேதி நண்பகல் 12 வரை வழங்கலாம் என்று பேரவை செயலாளர் முனுசாமி குறிப்பிட்டுள்ளார்.

;