tamilnadu

img

புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு முதல் பரிசு

புதுச்சேரி, ஜூன் 19- புதுவை அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக் கழகத்துடன் இணைந்து புதுவை பள்ளிக் கல்வித்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆத ரவுடன் 13வது சர்வதேச அளவில் ‘அறிவி யல் உருவாக்குவோம்’ ஆய்வுதிட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி  பள்ளி மாணவர்களின் 50 ஆய்வறிக்கைகள் பாரீஸ் பல்கலைக் கழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில்  சிறந்த 12 ஆய்வ றிக்கைகளை  பல்கலைக்கழகம் தேர்ந்தெ டுத்து, ஊக்கத்தொகையாக ரூ. 3000 வழங்கி யுள்ளது. மேலும், ஆய்வைத் தொடரவும்  அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆய்வு திட்டத்தின்படி சிறந்த 4 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு சான்றிதழ் மற்றும்  முதல் பரிசாக 300 யூரோவும், மூன்று மற்றும்  இரண்டாம் பரிசுக்கு தலா 100 யூரோவும் பல்கலைகழகம் சார்பில் வழங்கவுள்ளது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆய்வறிக்கைகளும் பள்ளி வாரி யாக மேட்டுப்பாளையம் அரசு உயர் நிலைப்  பள்ளிக்கு முதல் பரிசாக ரூ. 18000 வழங்கப்  பட்டது. அதேபோல் இரண்டா வது பரிசாக  காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்  நிலைப் பள்ளிக்கும்,  மனப்பட்டு கிராமத்தில் பறவைகள் – இயற்கை சிற்பிகள் குறித்தும் மாணவர்கள்  ஆய்வுதிட்டத்திற்கும், புவி வெப்பமயமா தலை குறைப்பது குறித்து மரங்கள் குறித்து மாணவர்களின் ஆய்வு திட்டத்திற்கும் பரிசுத் தொகையாக  ரூ. 6000  பள்ளிகள் வாரியாக பரிசுகள் மற்றும் சான்றி தழ்கள் வழங்கப் பட்டது. தேர்வான பள்ளி மாணவர்களுக்கு பரிசு  வழங்கும் விழா ஜூன்- 18 அன்று புதுச்சேரி  கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்றது. கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடு, சுற்றுச்  சூழல் துறை ஆய்வாளர் சிவக்குமார், மாநில  பயிற்சி மைய சிறப்பு அலுவலர் மைக்கேல் பெனோ ஆகியோர் கலந்துகொண்டு மாண வர்களுக்கு பரிசு மற்றும் சான்று வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் புதுவை அறிவியல் இயக்கத் தலைவர் அமுதா,   துணைத் தலை வர்கள் மதிவாணன், சேகர்,  செயலர்கள் அருண் நாகலிங்கம், விஜயமூர்த்தி, பொரு ளாளர் ரமேஷ் உட்பட 12 அரசுப் பள்ளியை  சேர்ந்த வழிகாட்டி ஆசிரியர்கள், மாண வர்கள் பலர் பங்கேற்றனர்.