tamilnadu

img

வங்கி ஊழியரின் வீட்டை உள்குத்தகைக்கு விட்டு மோசடி: பாஜக இளைஞரணி நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டை வாடகைக்கு எடுத்து, உள் குத்தகைக்குவிட்டு மோசடி செய்த பாஜக இளைஞரணி நிர்வாகி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியா்  சுகுமாறன்(65). இவா் 2016 ஆம் ஆண்டு பாக்கமுடையான்பட்டு அன்னை நகரிலுள்ள தனது வீட்டை வெங்கட்டா நகரில் வசிக்கும் உழவா்கரை பாஜக இளைஞரணி நிா்வாகி பிறைசூடன்(30) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளாா்.  

அப்போது, பிறைசூடன் தனது தொழில் கூட்டாளிகளான செல்லபெருமாள்பேட் மோகன்ராஜ் (30), புவனா (36) உள்ளிட்டோா் அந்த வீட்டினை பயன்படுத்தி வந்ததாகவும், பின்னா் அந்த வீட்டை சுந்தா் என்பவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு குத்தகைக்கு விட்டதாகவும் கூறப்படுகிறது.  

இதற்கிடையே வாடகை ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடைந்த நிலையில் பிறைசூடனிடம் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளர். ஆனால் இதுவரை வீட்டை காலி செய்யாததால் சுகுமாா் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது சுந்தர் என்பவருக்கு உள் குத்தகைக்கு விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து கோரிமேடு போலீசில் சுகுமார் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீஸாா் பிறைசூடன், மோகன்ராஜ், புவனா, சுந்தா் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஏற்கனவே ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் தங்கமணியின் வீட்டை வாடகைக்கு எடுத்து குத்தகைக்கு விட்டு மோசடி செய்யப்பட்ட வழக்கில் பிறைசூடன், மோகன்ராஜ் ஆகிய 2 பேரும் கைதாகி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

;