tamilnadu

img

புதுச்சேரி இரட்டைக்கொலை வழக்கில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் கைது  

புதுச்சேரியில் இரட்டைக்கொலை வழக்கில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் விக்கி என்ற விக்னேஷை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் வாணரப்பேட்டை பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தனது நண்பர் அந்தோணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பாம் ரவி மீது வெடிகுண்டுகள் வீசினர். இதில் அவர் தப்பி ஓடியபோது, உடனிருந்த நண்பன் அந்தோணி மீதும் வெடிகுண்டுகள் வீசப்பட்டது. படுகாயமடைந்த இருவரும் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

அதனை தொடர்ந்து இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் மற்றொரு வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினோத், தீனதயாளன் என்ற தீனு ஆகியோரது சதி திட்டத்தின்படி கூலிப்படை வைத்து பாம் ரவியை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

இந்த நிலையில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் விக்கி என்ற விக்னேஷை அதிரடிப்படை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக விக்னேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

;