tamilnadu

இளைஞர் எழுச்சி தினப் பேரணி

அறந்தாங்கி, பிப்.23- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்தியாவில் ரோட்டரி நூற்றாண்டு அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக இளைஞர் எழுச்சி தின சைக்கிள் பேரணி நடை பெற்றது. வன் முறைக்கு எதிரான இன்றைய இளை ஞர்களை வழிநடத்தும் அமைதிப் பேரணி யாக நடைபெற்றது.  ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ்குமார் தலைமையிலான பேரணி யை அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலமுருகன் துவக்கி  வைத்தார். ரோட்டரி மாவட்ட துணை ஆளு நர் கராத்தே கண்ணையன் முன்னிலை வகிக்க ரோட்டரி கிளப் முன்னாள் தலை வர்கள், செலக்சன் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறை வாக செயலாளர் வீரையா நன்றி கூறி னார்.