tamilnadu

புதுக்கோட்டை மாவட்ட  அரசுப் பள்ளிகளில் மகளிர் தின விழா

புதுக்கோட்டை, மார்ச் 12- புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் உலக மகளிர் தின விழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஒடப்பவிடுதி அதனொரு பகுதியாக கறம்பக்குடி ஒன்றியம் ஒடப்ப விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடை பெற்ற உலக மகளிர்தின விழாவுக்கு பள்ளியின் தலைமை யாசிரியர் மை.மரியதுரைசிங்கம் தலைமையில் வகித்தார்.  மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் இயக்க  மாநில செயற்குழு உறுப்பினர் ஆ.மணவாளன், பொதுக்குழு  உறுப்பினர் மா.வீரமுத்து, கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மா.கோவிந்தராசு  ஆகியோர் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி  சிறப்புரையாற்றினர். ஊராட்சிமன்ற தலைவர் அ.கற்பக வல்லி, ஒன்றியக் குழு உறுப்பினர் ப.சங்கீதா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினர். வெள்ளாளவிடுதி கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி அரசு  உயர்நிலைப் பள்ளியில் நடைபெற் மகளிர்தின விழாவில் தலைமை ஆசிரியர் மா.அறிவுடைநம்பி தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அறிவியல்  இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார், பொருளா ளர் ஈ.பவுனம்மாள் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டி னார். மாவட்ட இணைச் செயலாளர் மா.சிவானந்தம், எழுத்தா ளர் அண்டனூர் சுரா ஆகியோர் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் ஆண்கள் மனங்களில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் குறித்தும் பேசினர்.

;