tamilnadu

அரசுப் பள்ளிக்கு வேன் பொதுமக்கள் வழங்கினர்

அறந்தாங்கி, ஜூன் 3-புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம்ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிஆவணத்தான் கோட்டை மேற்கில் புதிய வாகனம் இயக்கவிழா மற்றும் புதிய மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. ஊர் மக்கள், பெற்றோர் என அனைவரும் இணைந்து சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள வாகனம் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இதன் இயக்கவிழா 3-ம் தேதி பள்ளி துவக்க நாளில் நடைபெற்றது. பள்ளியில் புதிதாக சேர்ந்த சுமார் 40 மாணவர்கள் புதியவாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வரப் பெற்றனர்.தலைமையாசிரியர் கலைச்செல்வி வரவேற்று வாழ்த்தினார். புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு அறந்தாங்கி அரவிந்த் வழங்கிய சில்வர் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது. நிறைவாக பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பாஸ்கரன் நன்றியுரை கூறினார்.