tamilnadu

நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க மாணவர்களின் பங்களிப்பு அவசியம் புதுக்கோட்டை ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை: நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க மாணவர்களின் பங்களிப்பு அவசியம் என்றார் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி. இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நெகிழி பொருட்களை உபயோகிப்பதை முற்றிலும்  தவிர்த்திடவும், குடிநீர் அருந்துவதற்கு நெகிழி  குடுவைகளை பயன்படுத்துவதை தவிர்த்திடவும், பள்ளிக்கு செல்லும் வழியில் சாலை ஓரங்களில் நெகிழி பைகள் தென்பட்டால் அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு உரிய விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.  மேலும் மாணவர்கள் தங்கள் இல்லங்களில் பெற்றோர்கள் நெகிழி பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டும். இதன்மூலம் ஒவ்வொரு பள்ளியும் நெகிழி இல்லா பள்ளி வளாகமாக செயல்பட வேண்டும்.  மேலும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளபடி பள்ளி வளாகத்தில் தண்ணீர் எந்த இடத்திலும் தேங்கி நிற்காவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். திறந்தவெளி கிணறுகள் இருந்தால் இரும்புவளைகள் கொண்டு மூடி குழந்தைகள் அருகில் செல்லாவண்ணம் பாதுகாக்கப்படவேண்டும். இடியும்நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றிடவும், கழிவறைகள் தினசரி அதற்குரிய பணியாளர்கள் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.  டெங்கு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்ல அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் சாலைபாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;