புதுக்கோட்டை, ஜூன்.17- புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டத்திற்கு வருகை தரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக பேட்டரி பொருத்தப்பட்ட வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சர் பேட்டரி வாகனத்தை தொடங்கி வைத்தார். வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்ஏ ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.