tamilnadu

img

இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தன...

அறந்தாங்கி:
இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட  4 தமிழக மீனவர்களின்உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தஆரோக்கியசேசு (50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த மெசியா (30) , உச்சிப்புளியைச் சேர்ந்த நாகராஜ்,செந்தில்குமார், மண்டபத்தைச் சேர்ந்த சாம்சன் ஆகியநான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.இவர்கள் நான்கு பேரும் கரை திரும்பவில்லை. சக மீனவர்கள் விசாரிக்கையில்,  இலங்கை கடற்படையினர்தங்களது ரோந்து படகை ஆரோக்கியசேசுவின் விசைப்படகு மீது மோதவிட்டு, படகை கடலுக்குள் மூழ்கடித்து4 பேரை கொன்றுள்ளது தெரியவந்தது. 

இதனைக் கண்டித்தும்  மத்திய, மாநிலஅரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் அரசு பொது மருத்துவமனையில் இறந்த மீனவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு, இலங்கை கடற்படையினரிடம்  ஒப்படைக்கப்பட்டது.  பின்னர் 4 மீனவர்களின் உடல்கள்சனிக்கிழமையன்று காலை இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக் கப்பட்டன. உடல்களை பெறுவதற்காக இராமேஸ்வரம் மீன்வளத்துறை ஆய்வாளர் தலைமையில் இரண்டு விசைப் படகுகளில் பத்து மீனவர்களுடன் கோட்டைப்பட்டினம்  மீன்பிடித் துறைமுகத் தில் இருந்து சர்வதேச கடல் எல்லைக் குச் சென்றனர்.

கோட்டைப்பட்டினம் துறைமுக கடற்கரைக்கு மதியம் 2 மணியளவில் கொண்டுவரப்பட்டது.  அங்கு 4 மீனவர் களின் உடலுக்கு உறவினர்கள், மீனவர்கள், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கடலோர காவல் படை கண்காணிப்பாளர் ஜெயந்தி, சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட வருவாய்அலுவலர், சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மணமேல்குடி சேர்மன் இ.ஏ.கார்த்திகேயன் மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள், கோட்டை பட்டினம்மீனவர் சங்கத்தினர் உட்பட திரளானோர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல்துறையின் பாதுகாப்புடன் 4 ஆம்புலன்ஸ்களில் மீன
வர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

;