பொன்னமராவதி, ஜன.6- புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலை வர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்ற பதவியேற்பு விழாவில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் அலுவலர் ஸ்ரீகிருஷ்ணன் பதவி பிரமா ணம் செய்து வைத்தார். ஒன்றிய ஆணை யாளர் வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதே போல் தொட்டியம்பட்டி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்ட கீதா சோலையப்பன் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு, ஏ.ஆர்.ஒ தேக்லாமேரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.