புதுக்கோட்டை, ஜூன்.18- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை இளநிலை உதவியாளர்களாக பணிநிரந்தரம் செய்ய வெளியிடப்பட்ட அரசா ணையை அமல்படுத்தக்கோரி புதுக்கோட்டையில் வியாழக்கிழமை யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியா ளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.செல்வராஜ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆர்.திருப்பதி, பொரு ளாளர் டி.கதிர்வேல் மற்றும் நிர்வரி கள் ஏ.அமுதா, அ.கண்ணன் உள்ளிட்டோர் பேசினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை இளநிலை உதவியாளர்களாக பணிநிரந்தரம் செய்து ஈர்த்துக்கொள்வதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும். ஆண்டுதோ றும் ஊதிய உயர்வு கணக்கிட்டு நிலு வைத் தொகையுடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப்போல ஊராட்சி அளவில் இணையதள பதிவுகள் மேற்கொள்ள உரிய பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சமூக பாதுகாப்புகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை போராட்டத்தில் எழுப்பப் பட்டன.