tamilnadu

img

மாணவர்களுக்கு நிவாரண உதவி

 பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. நிகழ்விற்கு ஊராட்சி தலைவர் செல்வி முருகேசன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வெண்ணிலா மற்றும் ஆசிரியை கள், ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலமணி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி,காவல் உதவி ஆய்வாளர் மாயழகு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் மாணவர்களுக்கு நிவாரண உதவியை வழங்கினர்.