பொன்னமராவதியில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு
பொன்னமராவதி, பிப்.12- பொன்னமராவதி ஒன்றியம் வேகுப்பட்டி ஊராட்சியில் சிசிடிவி கேமராக்கள் தொடக்க விழா நடைபெற்றது. விழா விற்கு விராச்சிலை தொழிலதிபர் குமாரசாமி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் ஊராட்சியின் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் கருணாகரன், பனையப்பட்டி காவல் ஆய்வாளர் பத்மா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் துணை வட்டாட்சி யர் பிரகாஷ், சுதாரவி, ஆகாஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலை வர்கள், துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அகால மரணம்
திருத்துறைப்பூண்டி, பிப்.12- பி.எஸ்.ஆர் நகர் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலை யத்திற்கு அருகாமையில் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குறவ இன மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த கிளையின் சிபிஎம் செயலாளர் நாகூரான், செவ்வாயன்று அகால மரண மடைந்தார். அவரது குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஆறுதல் கூறினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுரா மன், நகரக்குழு உறுப்பினர் ஆர்.எம் சுப்பிரமணியன் உட னிருந்தனர்.
குடிசை வீடு எரிந்து சாம்பல்
சீர்காழி, பிப்.12- சீர்காழி அருகே கொடக்காரமூலை கிராமத்தைச் சேர்ந்த வர் சிவனேசன்(53). செவ்வாயன்று மாலை இவரின் குடிசை வீட்டிற்குள் இருந்த எரிவாயு சிலிண்டரிலிருந்து கசிந்த வாயு வால் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தி னர் ஓடிவந்து சிலிண்டரை எடுத்துச் சென்று அருகில் உள்ள வாய்க்கால் தண்ணீரில் போட்டனர். இருந்தும் குடிசை வீட்டில் தீ பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் வீட்டிற்குள் வைத்தி ருந்த அனைத்து அத்தியாவசியமான பொருட்களும் எரிந்து சாம்பலாயின. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து புதுப்பட்டினம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணியில் இன்று மின்தடை
தஞ்சாவூர், பிப்.12 - பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பேராவூரணி, காலகம் குருவிக்கரம்பை, பூக்கொல்லை, ரெட்டவயல், பெருமக ளூர், உடையநாடு, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வா.கொல்லைக்காடு, குறிச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால், படப்பனார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில், பிப்.13 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
கல்லூரி ஆசிரியர் கண்டித்ததால் விஷம் அருந்திய மாணவர்
சீர்காழி, பிப்.12- நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் சீனிவாசா சுப்ப ராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சிவில் பட்டய வகுப்பு பாடப்பிரிவில், கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் இந்திரா நகரைச் சேர்ந்த பிரேம்குமார் (20) என்ற மாண வர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். செவ்வாயன்று காலை சுழற்சி தேர்வு நடைபெற்றது. இதில் பிரேம்குமார் சரியாக தேர்வு எழுதவில்லை. இதனைப் பார்த்த சிவில் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன் மாணவனைக் கண்டித்தார். இதில் வெறுப்படைந்த பிரேம்குமார் கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை ஆசிரியர்-மாண வர்கள் முன்னிலையிலேயே குடித்தார். திடீரென ஆசிரியர்-மாணவர்கள் விஷபாட்டிலை பறித்தனர். இருந்தபோதும், குறைந்த அளவிலான விஷத்தை குடித்த மாணவன் பிரேம்கு மாரை, கொள்ளிடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வகுப்பை விட்டு வெளியேறி கல்லூரி வாசல் முன்பு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தபின், மாணவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து இரண்டாமாண்டு சிவில் பட்டய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செவ்வாய் முதல் விடுமுறை என்பதால், திங்கட்கிழமை முதல் தேர்வு நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது.