அறந்தாங்கி, ஜூன் 1- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அமராவதி நகர் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி அறந்தை ரோட்டரி கிளப், முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம், முன்னாள் நகரசபை கவுன்சிலர் துளசி ராமன் ஆகியோர் சார்பில் ரோட்டரி கிளப் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவர் ஆடிட்டர் தங்கதுரை தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம், 100 பேருக்கு அரிசி, காய்கறி தொகுப்புகளை வழங்கினார். முன்னாள் நகரசபை கவுன்சி லர்கள் இரா.ஆனந்த், துளசி ராமன், ரோட்டரி கிளப் பட்டயத் தலைவர் முரளிதரன், உறுப்பி னர்கள் தாமஸ் சத்துருசங்கார வேல்சாமி, பொன் முத்துராமலிங்கம், புவனா செந்தில் குமார், ஆத்மா மதிவாணன், செல்வம், சிவ சுப்பிரமணியன், செந்தில்வேலன், விஜய சுந்தர், வெங்கட்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.