tamilnadu

இணைய வழி வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை, ஜூலை 7-  புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் எதிர்வரும் ஜூலை இரண்டாவது வாரத்தில் (8.7.2020 முதல் 15.07. 2020 வரை) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொ ழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மாற்றுத்தி றனாளிகள், பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாண விகள் மற்றும் வேலைநாடும் இளைஞர்களுக்கு உயர்கல்வி, போட்டித் தேர்வு, திறன்பயிற்சி மற்றும்  தனியார் துறை வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு  நிகழ்ச்சிகள் இணைய வழியாக நடைபெற உள்ளது.  மேலும், இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டம்  சார்பாக அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி  வகுப்புகள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் வல்லு நர்களை கொண்டு ஆன்லைன் மூலமாக தினமும் நடை பெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட இளை ஞர்கள் இந்நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ள ப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்க ளுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி எண்ணிலோ  தொடர்பு  கொள்ளலாம்.

;