tamilnadu

நாகை, புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

மின்னல் தாக்கி 2 மாடுகள் பலி
சீர்காழி, செப்.24- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரெங்கம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை மகன் ஜோதிமணி(50). இவருக்குச் சொந்தமான வடரெங்கம் கிராமத்தில் உள்ள வயலில் ஒரு காளை மற்றும் ஒரு பசு மாட்டை மேய விட்டு அருகே உள்ள பருத்தி வயலில் அறுவடை செய்து கொண்டி ருந்தார். அப்போது திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்த போது பலத்த இடி சப்தத்துடன் மின்னல் தாக்கி யதில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மாடுகளும் அதே இடத்தில் விழுந்து இறந்தன.  இது குறித்து தகவலறிந்த சாமியம் கால்நடை மருத்துவ மனை மருத்துவர் பகத்சிங் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். இறந்த இரு மாடு களின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

செப்.27 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
புதுக்கோட்டை, செப்.24-புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.09.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடை பெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை யில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கை களுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக் கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

முத்தமிழ்ப் பாசறை கருத்தரங்கம்
பொன்னமராவதி, செப்.24-புதுக்கோட்டை பொன்னமராவதியை அடுத்த ஆ. தெக்கூர் சிங்கை சித்தர் அய்யா கலை அறிவியல் கல்லூரி யில் முத்தமிழ்ப் பாசறை சார்பாக செம்மொழியான தமிழ் மொழி எனும் தலைப்பில் மாணவர்களுக்கான மாவட்ட அள விலான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு முனைவர் தமிழாகரர் பழ.முத்தப்பன், கருத்தாளர்களாக பேராசிரியர் முனைவர் மா.சிதம்பரம், பேராசிரியர் முனை வர் மு.பழனியப்பன் ஆகியோரும் பங்கேற்றனர். கல்லூரி தாளாளர் செந்தில்குமார் தலைமையேற்றார். தமிழ்த்துறை பேராசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார் கல்லூரி முதல்வர் ஹேமமாலினி, பாசறை அறங்காவலர் குழு தலைவர் மருத்துவர் மு.சின்னப்பா, பாசறைத் தலை வர் நெ.இரா.சந்திரன்,பொருளாளர் சி.சு.முருகேசன் மேனாள் தலைவர் அரு.வே.மாணிக்கவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் பாசறைத் துணைத்தலைவர் பெ. மாரிமுத்து, மேனாள் தலைவர் கி.இரமேசு அறங்காவ லர்கள் அ.தட்சணாமூர்த்தி, மு.இராஜாமுகமது, சுப.கனகு, செயற்குழு உறுப்பினர் பெரி.சி.சிங்காரம், அழ.இளைய ராஜா, மக்களிசைப் பாடகர் வைகை பிரபா மங்கைபாகன், மெ.இராமச்சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றுச் சிறப் பித்தனர். பாசறைத் துணைத்தலைவர் கோ.பார்த்தசாரதி நன்றி கூறினார். நாற்பது மாணவர்கள் உட்தலைப்புகளில் கட்டுரை சமர்ப்பித்தனர் பத்து மாணவர்களின் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயம்
புதுக்கோட்டை, செப்.24-புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி அண்ணா விரைவு மிதிவண்டி பந்த யத்தினை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தொடங்கி வைத்துப் பேசியது: கல்வி கற்கும் காலங்களிலேயே மாணவ, மாணவியர்கள் விளையாட்டு துறையிலும் ஆர்வம் செலுத்தி உடல்நலத்தையும், சிறந்த மனநலத்தை யும் பெற வேண்டும். மேலும், விளையாட்டு துறையின் மூலம் கிராமப்புற, நகர்ப்புற இளைஞர்களை உலக அளவில் சாத னையாளர்களாக உருவாக்கும் பணியினை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக  அரசும் வேலைவாய்ப்பு வழங்குவதில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு சலுகைகளை வழங்கி வரு கிறது. பெற்றோர்களும் இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். இந்தப் போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். குறிப்பாக 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனி பிரிவாக போட்டிகள் நடத்தப் பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மாவட்ட விளை யாட்டு அலுவலர் மாலதி, மாவட்ட சைக்கிள் அசோசி யேசன் செயலாளர் அசோகன் மற்றும் தொடர்புடைய அலு வலர்கள் பங்கேற்றனர்.