புதுக்கோட்டை, ஆக.7- புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் கழிப்பறையில் மறைந்திருந்து மாணவிகளை காமுகன் ஒருவன் படம் பிடித்துள்ளதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ளது அரசு மகளிர் கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என மாணவிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறை முற்றிலும் சேதமடைந் துள்ளதால் அதைப் பயன்படுத்த முடியாமல் மாணவிகள் தவித்து வருகின்றனர். வேறு வழியின்றி கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தடியை திறந்த வெளிக் கழிப்பறையாக மாணவிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கல்லூரி சுற்றுச்சுவரில் மறைந்து நின்று ஒரு காமுகன் மாணவிகள் சிறுநீர் கழிக்கும்போது படமெடுத்துள்ளான். இதைப் பார்த்த மாணவிகள் அதிர்ச்சியில் அலறி சத்தம் போட்டுள்ளனர். மேலும், அந்த காமு கனைப் பிடித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள னர். அதே நேரத்தில், கல்லூரி நிர்வாகம் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மாணவர் சங்கம் கண்டனம்
இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனா ர்த்தனன் கூறுகையில், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கழிப் பறை முற்றிலுமாக சேதமடைந்து பல மாதங்கள் ஆகிறது. மேலும், மாணவி கள் பயன்படுத்திய நாப்கின்களை எரி யூட்டும் எந்திரமும் பழுதாகி பல மாதங்கள் ஆகின்றன. இதனால், மாண விகள் கடுமையான மன உளைச்ச லுக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத் துள்ளோம். ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்துதான் மாணவி களுக்கு இத்தகைய அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கீழ்த்தரமான சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அந்த காமுகனை கைது செய்து உரிய தண் டனை வழங்க வேண்டும். உடனடியாக மாணவிகள் பயன்படுத்துவதற்கு புதிய கழிப்பறையைக் கட்டித்தர வேண்டும். நாப்கின் எரியூட்டும் எந்தி ரத்தை உடனடியாக பழுதுநீக்கி மாண விகள் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கத்தின் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார். இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனா ர்த்தனன் கூறுகையில், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கழிப் பறை முற்றிலுமாக சேதமடைந்து பல மாதங்கள் ஆகிறது. மேலும், மாணவி கள் பயன்படுத்திய நாப்கின்களை எரி யூட்டும் எந்திரமும் பழுதாகி பல மாதங்கள் ஆகின்றன. இதனால், மாண விகள் கடுமையான மன உளைச்ச லுக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத் துள்ளோம். ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்துதான் மாணவி களுக்கு இத்தகைய அவலம் ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கீழ்த்தரமான சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அந்த காமுகனை கைது செய்து உரிய தண் டனை வழங்க வேண்டும். உடனடியாக மாணவிகள் பயன்படுத்துவதற்கு புதிய கழிப்பறையைக் கட்டித்தர வேண்டும். நாப்கின் எரியூட்டும் எந்தி ரத்தை உடனடியாக பழுதுநீக்கி மாண விகள் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கத்தின் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.