அறந்தாங்கி, மே 16- புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் வடபாதி பகுதி களில் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் கஷ்டப் பட்டு கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முக நாதன், மாவட்ட கவுன்சிலர் சரிதாமேகராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி செல்வம், ஊராட்சி தலைவர் ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இணைந்து அரிசி மற்றும் காய்கறிகளை 300 குடும்பங்களுக்கு வழங்கினார். முன்னதாக தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப் பட்டு பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது. மகளிர் அணி சரஸ்வதி, இளைஞர் அணி அருண்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.