tamilnadu

img

மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை, அக்.16- புதுக்கோட்டை அருகே இடி, மின்னல் தாக்கி படுகாயமடைந்த வர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், மாநிலப் பொருளாளருமான எஸ்.சங்கர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதா வது: புதுக்கோட்டை அருகே உள்ள வைத்தூர் மற்றும் தொழு தாம்பட்டியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாய்க் கிழமை விவசாயக் கூலி வேலை செய்து கொண்டிருக்கும் போது இடி,மின்னல் தாக்கியது. இதில் வைத்தூரைச் சேர்ந்த எத்திராஜ் மனைவி சாந்தி (35), ஆறுமுகம் மனைவி விஜயா (47), ராஜேந்தி ரன் மனைவி கலைசெல்வி(45) தொழுதாம்பட்டியைச் சேர்ந்த லெட்சுமணன் மனைவி லெட்சுமி அம்மா(65) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும், படுகாயமடைந்த 19 பேர் புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிட மாக உள்ளது. இந்நிலையில், உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று புதன்கிழமைறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித் துள்ளார். படுகாமடைந்தவர்க ளுக்கு எந்த நிவாரணமும் அறி விக்கப்படவில்லை. மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு என்பது போதுமானதல்ல. இறந்துபோன விவசாயத் தொழிலாளர்களை நம்பியுள்ள குடும்பத்திற்கு நிவா ரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், விபத்தில் படுகாய மடைந்த விவசாயத் தொழிலா ளர்களில் பலர் குணமடைந்தா லும் பழையபடி கூலிவேலைக்கு செல்லும் வகையில் உடல் தகுதி யுடன் இருப்பதற்கு வாய்ப் பில்லை. எனவே, காயமடைந்த வர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேலும், காயத்தின் தன்மைக்கு ஏற்ப ரூ.5 லட்சம் வரை அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், விதொச மாநிலப் பொரு ளாளர் எஸ்.சங்கர், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர்,  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமண வாளன், ஒன்றியச் செயலாளர் சி.ஜீவானந்தம், ஜி.நாகராஜன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

;